Mar 25, 2011

`சாமான்ய' சிம்மாசனங்கள் !


















வேலு

பொன்முடி


தேர்தல் வந்தாலே, குதூகலம்தான். மக்கள் பொழதைப் போக்க ஏராளமான கேளிக்கைகள். இம்முறை தேர்தலின் கூடவே உலகக் கோப்பை கிரிக்கெட் பரபரப்பும் சேர்ந்துவிட்டது.

தேர்தல் பிரசார பொழதுபோக்கில் நகைச்சுவை இல்லாமல் இருந்தால் எப்படி ? நகைச்சுவைகள் இருக்கத்தான் செய்கிறது.

பாவம், முதல்வர் கலைஞருக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் சொந்தமாக கார் இல்லை. தயாளு அம்மாளுக்கு மட்டும் 16 லட்சத்தில் ஒரு கார் இருக்கிறது. ராஜாத்தி அம்மாள் பாவம் மகள் கனிமொழியிடம் ஒரு கோடி கடன் வாங்கியிருக்கிறார். வேறு ஏது வருமானம்.ஸ்டாலினின் மொத்த சொத்தே இரண்டு கோடிகளைத் தாண்டவில்லை.

ஜெயலலிதாவும் பாவம் அவருடை மொத்த சொத்து மதிப்பே 51 கோடிகள் தான்.

கலைஞரின் கையிருப்புத் தொகை வெறும் 25,000 தான்.

தண்டராம்பட்டில் சாதாரண பஸ் நடத்துனராக இருந்து இன்று 7.8. கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ள அவரது உணவு அமைச்சர் எ.வ.வேலுவிடம் கையிருப்பு தொகை 1.76 லட்சம்.

சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மதிபு 2.01.கோடி

அமைச்சர் த.மோ தாமோதரன் சொத்து 5.01 கோடி.

அரசு கொறடா சக்கரபாணி 4.52 கோடி.
அரவக்குறிச்சியில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமி சொத்து மதிப்பு வெறும் 67.65 கோடி'
தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜா 12.43 கோடி. ஆனால் இவரிடம் கார் இல்லை. ஒரே ஒரு ` புல்லட்' மட்டுமே சொந்தம்.

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் சிவாஜி 3.67 கோடி'
அமைச்சர் பொன்முடி 8.22 கோடி. இவரால் ஆசிரிய இனமே பெருமையடைந்திருக்குறது, கல்லூரியின் உதவிப் பேராசியராக இருந்து இந்த அளவிற்கு வளர்ந்திருப்பது ஆசிரிய இனத்திற்கே பெருமைதானே.
இதில் உணவு அமைச்சர் வேலுவின் சொத்து மட்டுமே இந்த ஐந்து ஆண்டுகளில் 700 மடங்கு உயர்ந்திருக்கிறது. அவருக்கு சொந்தமாக கார் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்து துன்பம் வரும்போது, மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் வேலு.

`வருமானம் பெருகியதே என்னுடைய விவசாயத்தின் மூலமாகத்தான்' என்கிறார் வேலு.

இந்தியா முழவதும் விவசாயிகள் செத்து ம்டிந்து கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே உணவு உற்பத்திக்கான அதிக நிலங்கள் உள்ள தேசம் இந்தியாதான். ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாய முதலீடு என்பது 1970-71 களில் 19.2. சதவீதம். ஆனால் இப்போது 8.3 சத வீதம்தான். பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலையே செய்து கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல விவசாயிகள் கந்து வட்டிக்கு பணம் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டால் கூட விவ்சாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைப்பது கடினம். இந்த நிலையில் வேலு விவசாயத்தின் மூலமாக தன் வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அவருக்கு சர்வதேச விருதுகள் வழங்கி கெளரவிக்க வேண்டாமா ? அல்லது சரத் பவாருக்கு பதிலாக அவரை மத்திய் உணவு துறை அமைச்சர் ஆக்கி, இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தலாமே.

ஆனால் கலைஞர் குடும்பம் செய்திருக்கும் சாதனையை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம்.

தன் குடும்பத்தை விட தன்னை நாடி வந்த சாமான்ய அமைச்சர்களையும், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் பெரிய சாம்ராஜ்ய சிம்மாசனத்தில் உட்கார வைத்து பார்க்கிற பரந்து உள்ளம் எந்த தலைவனுக்காவது வருமா ?

கடைசி ஏழை இருக்கும் வரை அரசுப் பணத்திலிருந்து இலவசங்கள் வழங்குவேன் என்று கருணையோடு கலைஞர் சொல்லியிருக்கிறார். சொல்லாமே செய்தது தான் இந்த சாமான்யர்களுக்கு சிம்மாசனம் அமைத்துக் கொடுத்தது.

இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கும் போது எனக்கும் மின்னஞ்சலில் ஒரு த்கவல் வந்திருக்கிறது.

தமிழக அரசின் விளம்பரங்கள் சன், மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் வருகிறது. இந்த விளம்பரங்கள் மூன்று நான்கு நிமிடங்கள் வரை போகிறது.

இவையெல்லாம் சமூக நலன் கருதி வரும் இலவச விளம்பரங்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் குரோம்பேட்டையிலுள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் சந்தானம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு தகவலை அரசு விளம்பரத்துறையிலிருந்து பெற்றிருக்கிறார்.

அவர் கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும் கீழே தரப்பட்டுள்ளது.

*கேள்வி*:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

*பதில்*:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம்
அல்ல. கட்டண விளம்பரம் தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும்.

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினர்தான்..
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு
கொடுக்கக்ப்படுகின்றன ? சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம்.

சரி - கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?

இதில் விநோதம்,அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு
விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது முதல்வர் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)

தமிழக அரசின் சாதனைகளாக வெளிவரும் பல திட்டங்களுக்கு நிதி மத்திய அரசுதான் வழங்குகிறது. அந்த திட்டங்கள் கூட கலைஞர், ஸ்டாலினின் சாதனைகளாகவே இந்த விளம்பரங்களில் காட்டுவதும், அதைஆண்மையற்ற தமிழக காங்கிரஸ் பார்த்துக்கொண்டிருப்பதுதான் கொடுமை !

1 comment: