Mar 28, 2011

மோடியும், மோடி மஸ்தான்களும்?!என் அருமை நண்பர் கோபால்ரத்னம் ஒரு மின்னஞ்சலை எனக்கு அனுப்பியிருக்கிறார். இவர் அதிமுக அனுதாபி அல்ல. தமிழ்நாடு இந்த தேர்தலில் சுதந்திரமடைய வேண்டுமென்று நினைக்கிற ஒரு தேசாபிமானி. இவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் என்னுடைய இணையதளத்திலுள்ள குடும்ப கும்மாளம் என்கிற கட்டுரையைப் படிக்கவும்.


இதைப் படிப்பதற்கு முன், நான் பாரதீய ஜனதாவின் அபிமானிஅல்ல், அதே சமயம் காங்கிரஸின் போலி மத சார்பின்மையை ஆதரிப்பவனும் அல்ல. குஜராத்தின் முன்னேற்றத்தைப் பற்றி பாரதீய ஜனதா கூட அதிகம் விளம்பரம் செய்யாது. காரணம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்த விளம்பரத்தின் மூலம் தேசிய அரசியலுக்கு வந்த பிரதமர் பதவி போட்டிக்கு வந்துவிடுவாரோ என்று அந்தக் கட்சியிலுள்ள மேலிடத் தலைவர்கள் நினைப்பதுதான். ஆனால் சில உண்மைகளை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.


ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்.

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது.


ஓட்டுக்கு பணம் கிடையாது.


டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).


கரண்ட் கட் கிடையாது.


இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது. இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்..

பத்து வருடத்திற்கு முன்பு குஜராத அரசு உலகவங்கியில் வாங்கிய கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.(ஆ.ராசா மதிப்பை விட கொஞ்சம் குறைவுதான் !)

இன்று..

கடனை திருப்பி செலுத்திவிட்டது. இப்போது அந்த அரசின் கையிருப்பது தொகை 1 லட்சம் கோடிகள்.


மீண்டும் ஒரு ஃபளாஷ்பேக்

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது.


ஓட்டுக்கு பணம் கிடையாது.


டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .

கரண்ட் கட் கிடையாது.


இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.


இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.


இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.


இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)


நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)


அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.


நம் மாநிலத்தின் நிலை??


அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.


இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..


மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.


இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.


இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.

உலகம் நம்மை காரி உமிழும்.


நல்ல வரலாறு படைப்போம்.


கோபால்ரத்னம் அனுப்பிய இந்த கருத்தோடு நாம் உடன்படவேண்டுமென்கிற அவசியமில்லை. எனக்கே உடன்பாடில்லை. இலவசங்களை வாங்கி நான் பணக்கார பிச்சைக்காரனாவதை நண்பர் கோபால் பொறமையோடு பார்க்கிறார் நான் என்ன செய்ய முடியும்.

1 comment:

  1. நல்ல பதிவு.
    மக்கள் நன்கு யோசிக்க வேண்டும்.
    ஏப்ரல் 13 நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
    நன்றி.

    ReplyDelete

There was an error in this gadget