Mar 3, 2011

மஞ்சள் சால்வையும், கருஞ்சிவப்பு சேலையும் !

தேர்தல் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள், வாக்குகள் எண்ணப்படும் தேதிக, இந்த அறிவிப்புகள் வந்துவிட்டது. இந்த அறிவிப்புகள் குறித்து தன்னுடைய அதிருப்தியையும் தெரிவித்துவிட்டார் முதல்வர்.

இனி அரசியல் வல்லுனர்கள் தேர்தல் நிகழ்வுகள், கூட்டணிகள், அதன் பலம், தமிழகத்தில் கட்சிகளுக்குள்ள எதிரிப்பு, ஆதரவு அலைகள்., வேட்பாளர் தேர்வு என்று எழத ஆரம்பித்துவிடுவார்கள்.

இதில் ஜோதிடர்களுக்குத்தான் கொண்டாட்டம். ஆளாளுக்கு ஒரு கணிப்பை சொல்வார்கள்.

எத்தனை கட்சிகள் களத்தில் இருந்தாலும், பிரதான தலைவர்கள் கலைஞரும், ஜெயலலிதாவும்தான். சமீப காலமாக ஜெயலலிதாவின் தோற்றத்தில் ஒரு மாற்றம். அவர் அணிந்து வந்த பச்சை சேலை இப்போது காணவில்லை. கருஞ்சிவப்பு சேலையில்தான் பவனி வருகிறார். கலைஞர் மஞ்சளள், ஜெ என கருஞ்சிவப்பு என்றாகிவிட்டது.

இந்த வண்ணங்களுக்கு ஏதாவது முக்கியத்துவம் உண்டா ? உளவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் ?

மஞ்சள் மகிமை என்ன ?

மஞ்சள் நம்பிக்கை. உற்சாகம், மகிழ்ச்சிக்கான நிறம். ஆக்க பூர்வமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நிறம். மூளையை உற்சாகப்படுத்தும்.நரம்புகளை ஊக்குப்படுத்தும். நினைவு,பேச்சாற்றலை தூண்டும்.

மஞ்சளின் சரித்திர மகத்துவம் என்ன ?

உதாரணமாக ஜப்பானில் போர் வீரர்கள் தங்களுக்கு தைரியத்தைக் கொடுக்க மஞ்சள்பூக்களை பயன்படுத்துவார்கள்.

எகிபதிலும், பர்மாவிலும் துக்கத்தின் நிறம் மஞ்சள்

இந்தியாவில் மஞ்சள் என்பது புனிதம். ஆன்மிகம்.


பண்டைக்கால பிரான்ஸில் `கிரிமினல்' களின் வீட்டு வாசலில் மஞ்சள் வண்ணம் பூசிவைப்பார்கள்.

அதிக சக்தியை தனக்குள் வாங்கிக் கொள்ளும் கருஞ்சிவப்பு.
உற்சாகத்தை ஊக்கப்படுத்தும்.பலத்தைப் பெருக்கும். செயலையும், நம்பிக்கையையும் உற்சாகப்படுத்தும். பயம், பதட்டம் இவற்றின் பாதுகாவலன் கருஞ்சிவப்பு.

சரித்திர பூர்வமாக பார்த்தால்,பல மொழிகளில் அழகின் அடையாளம் கருஞ்சிவப்பு.

சீன கலாச்சாரத்தில் கருஞ்சிவப்பு, பொதுவாக சிவப்பு நிற குடும்பமே கோடைக் காலம், நெருப்பு, தெற்கு திசையை குறிக்கும்.

ஜப்பானில் சரணாலயங்களின் நிறம் கருஞ்சிவப்பு.

இங்கிலாந்தில் சிவப்பு டெலிபோன் பூத்களும், இரட்டை அடுக்கு பேருந்துகளும் தேசிய அடையாளங்கள்.

இந்தியாவில் வெற்றித்திலகத்தின் இன்னொரு நிறம் கருஞ்சிவப்பு.உதாரணமாக குங்கும சிவப்பையும், கருப்பு கூந்தலையும் இணைத்தால் கருஞ்சிவப்பு.

சரி ஜோதிட ரீதியாக இந்த நிறங்களுக்கு என்ன முக்கியத்துவம்.?

கலைஞர், ஜெயலலிதா இருவருமே ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள் என்று சவால் விட்டு சொல்கிறார்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கள். கலைஞருக்கு ` பாராட்டு விழா எடுக்க இன்னொரு வாய்ப்பு.

`இவ்விடம் ஜோதிடம் பார்க்கப்படும்' என்பவர்களை தவிர்த்து, ஜோதிடத்தை தொழிலாக செய்யாமல் அதில விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி செய்பவரை தேடி கடைசியாக டெல்லியில் கண்டுபிடித்தேன்.

அவரின் ஆராய்ச்சியின்படி முதலில் மஞ்சளுக்கு வருவோம்.

கலைஞரின் ஜாதகப்படி அவர் கடக லக்கினம்,ரிஷப ராசியில் பிறந்தவர்.

கடக லக்னத்திற்கு 6,9,ம் வீடுகளின் அதிபதியான வியாழனும்,5,10 வீடுகளின் அதிபதியான செவ்வாயும். முழ யோகத்தை கொடுப்பவர்கள்.

9 க்குரிய வியாழன் கலைஞர் ஜாதகத்தில் 5ம் வீட்டில் உள்ளார்.

5ம் வீடான விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய், 7ம் வீட்டில் உச்சம் பெற்றுள்ளார்.

கடக லக்னத்தின் லக்னாதிபதியான சந்திரன் 11ம் இடத்தில்
உச்சம் பெற்றுள்ளார்.உச்சம் பெற்ற சந்திரனுக்கு, வியாழன் 7ம் இடத்தில் அமைந்து கஜகேசரி யோகம் பெற்றுள்ளார். கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம்.

அதனால் வியாழனின் நிறமான மஞ்சளை எடுத்துள்ளார் கலைஞர். மஞ்சள் நிறத்தை கையில் எடுத்த பிறகு அரசியலில் ஏறுமுகமாகம்தான்.ஆனால் மஞ்சள் என்பது ஆன்மீகத்தின் நிறம். அந்த நிறத்தை வைத்து தவறுகள் செய்தால் அது விபரீதத்தில்தான் முடியும். பிரேமானந்தா, நித்யானந்தா, சந்திராசாமி. ஒரு கட்டத்தில் ஜெயேந்திரர் உட்பட. இதற்கு உதாரணங்கள் ஏராளமுண்டு.

கருஞ்சீவப்பு.

ஜெயலலிதா மிதுன லகனத்தில், சிம்ம ராசியில் பிறந்தவர்.

மிதுன லக்னத்திற்கு புதன் கிரகம் லகனாதிபதியாவார். 4ம் வீட்டுக்குரியவரும் கூட. சிம்ம ராசிக்கு 2,11ம் வீட்டுக்கு உரியவராவார்.

அவரது ஜாதகத்தில் புதன் லகனத்திற்கு 9 ம் இடத்தில் உள்ளார். 9க்கு இரண்டாம் வீடான மீனத்தில் சுக்ரன் உச்சம் பெற்றுள்ளார். (லகனத்திற்கு 10ம் இடம்)

பச்சை நிறம் என்பது புதனுக்குரியது. ஆக அந்த பச்சை நிறம் கலையுலகத்தில் அவரை கொடி கட்டி பறக்கச் செய்தது. .

ஆனால் அரசியல் களத்தில் வரும்போது, மஞ்சள் நிறத்துடன், பச்சையால் ஈடு கொடுக்க முடியவில்லை.

முன்பு அவருக்கு தவறுதலாக ஜோதிட அறிவுரை சொல்லியிருக்கிறார்க்ள்.

நாத்திகவாதியான கலைஞர் இந்தியாவின் ஆன்மீக அடையாளமான மஞ்சளை தேர்தெடுத்திருக்கிறார்.

ஆன்மிகத்தில் முழ நம்பிக்கை வைத்துள்ள ஜெய்லலிதா தவறுதலான வண்ணத்தை தேர்ந்தெடுத்தார். இது காலத்தின் கோலம்

சமீபகாலமாக கருஞ்சிவப்பை அவர் எடுத்தவுடன் ஏறுமுகம் துவங்கிவிட்டது.

அதற்கு காரணத்தை பார்ப்போம். லகனத்திற்கு 11ம் இடத்தில் ராகு உள்ளார். சிம்ம ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.லக்னாதிபதி புதனுக்கு வீரவீர்ய ஜெயஸ்தானமான 3ம் வீட்டில் அமர்ந்துள்ளார். அவருக்கு இடம் கொடுத்த செவ்வாய், ராகுவிற்கு 5ம் வீட்டில் அமர்ந்துள்ளார். ராகு, செவ்வாய் இருவரையுமே மிதுன லக்னத்திற்கு 7ம் இடத்தில் ஆட்சி பெற்ற வியாழன் ராகுவை 5ம் பார்வையாகவும், செவ்வாயை 9ம் பார்வையாகவும் பார்த்துள்ளார்.

ராகுவின் நிறமான கறுப்பையும் செவ்வாயின் நிறமான சிகப்பையும் கையெலெடுத்தபின் அதுவே இவருக்கு ஏறுமுகமாக அமைந்து சாதனைகள் படைக்க வழி வகுக்குமாம்


1 comment:

  1. எப்படியெல்லாம் யோச்கீறாங்க..

    ReplyDelete