Mar 21, 2011

`இலவசங்க'ளும் `இளிச்சவாயர்'களும்


திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையைப் பார்க்கும்போது, சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம் என்கிற திமுகவின் சூளுரை சரிந்து போயிருப்பது தெரிகிறது.

சாதனை புரிந்திருந்தால் எதற்கு இத்தனை இலவசங்கள்? அல்லது இலவசங்கள்தான் இந்த அரசின் சாதனைகளா? புரியவில்லை. மக்களை இலவச போதையில் தள்ளிவிட்டு தொடர்ந்து ஆளுபவர்கள் கொள்ளையடிப்பதற்கான வழிகள்தான் இந்த இலவசங்கள்.

இப்போது ஆளும் கட்சி தேர்தலுக்கு காசு கொடுப்பதைப் போல தேர்தல் கமிஷனால் தடை போட முடியாத இலவச திட்டங்களை அறிக்கைகளாக கொடுத்திருக்கிறது. இப்போது அதே பாணியை அதிமுகவும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் வரும். இலவசம் என்பது ஒரு மோசமான முன்னுதாரணம். தமிழ்கத்தைப் பொறுத்தவரையில் பல மோசமான முன்னுதாரணங்களுக்கு உதாரண புருஷரே இன்றைய முதல்வர் கருணாநிதிதான்.

கருணாநிதியின் மோசமான முன்னுதாரணங்கள் என்று ஒரு பெரிய புத்தகமே எழதலாம். இந்த இலவசங்களினால் மக்களின் இன்றைய தேவைகள் பூர்த்தியாகும் நாளைய சந்ததிகளின் நிலை என்னவாகும் என்கிற யோசனை இல்லை. அதைப் பற்றி கலைஞர் ஏன் யோசிக்க வேண்டும்? தன் சந்ததிகளின் வளங்களுக்கான வழிகள்தான் இலவசங்கள் மூலமாக கிடைத்துவிடுகிறேதே.

அவருடைய வீட்டில் எந்த கொள்ளுப்பேரனுக்கு எந்த தொழிலும் இல்லையோ அவருக்கு இப்போதே ஒரு பெரிய மிக்ஸி கிரைண்டர் நிறுவனத்தை `அன்பாக' பேசி வாங்கிக் கொடுத்துவிடலாம். அல்லது அந்த நிறுவனத்திடமிருந்து, தமிழகம் முழவதற்குமான விற்பனை உரிமையைப் பெற்றுக்கொடுக்கலாம்

இலவச டிவி கொடுத்து தன் குடும்ப கேபிள் வினியோக தொழிலை பெருக்கிக் கொண்டு அரசு கேபிளை குழி தோண்டிப் புதைத்த பிதாமகர் அல்லவா நம் தமிழனத் தலைவர்.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்கத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா ? என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. இங்கு நடப்பது மன்னர் அல்லது மகாராணி ஆட்சி தானே ! உட்கட்சி ஜனநாயகம் என்கிற பொய் முலாம் பூசப்பட்ட ராஜா ராணி ஆட்சிகள் !.

இதை உறுதி செய்யும் வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம் தான் இந்த இலவசங்கள். மன்னர் விரும்ப்புகிறார் அதனால் பிரஜைகளுக்கெல்லாம் அள்ளி அள்ளி நன்கொடைகளை வழங்குகிறார். பிச்சைக்கார பிரஜைகளும் அதை வாங்கிக் கொண்டு மன்னரை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இலவசங்கள் என்ன திருக்குவளை ராஜ வம்சத்து மானியமா ? இது தமிழ்க மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்கள் சொந்த நலன்களுக்காக ஆளுங்கட்சி நடத்துகிற பகிரங்க பகற் கொள்ளை. இந்த இலவசங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறதா ? அல்லது உலக வங்கி கடனுதவி அளிக்கிறதா?

வளரும் நாடுகளில் மான்யங்களைக் கொடுக்காதே என்பதுதானே கடன் கொடுக்கும் உலக வங்கியின் முதல் நிபந்தனை. அப்படியிருக்க நம் கஜானாவை காலி செய்துவிட்டு அவர்கள் தொடர்ந்து ஆட்சியிலிருந்து கொள்ளையடித்துக் கொண்டே போவதை இளிச்சவாய் தமிழன் பார்த்துக்கொண்டிருக்க போகிறானா ?


கஜானா காலியானால் தொழில் வளர்ச்சியும், கல்வியின் மேன்மையும், சுகாதார சீர்திருத்தமும் எப்படி வரும் என்று சில படித்த பொருளாதார முட்டாள்கள் கூவிக்கொண்டேதானிருக்கிறார்கள். தொழில், கல்வி, சுகாதாரம் என்பதையெல்லாம் இனி அரசு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கம்யூனிச கைக்கூலிகள். வளர்ச்சியை விரும்பாத சமூக விரோத தீவிரவாத மாவோயிஸ்டுகள் என்று பழி சுமத்திவிட்டால் போகிறது.

அரசு இனி சாராய கடைகள் மட்டும் நடத்தும். தொழில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து,நிலக்கரி, தங்க சுரங்கங்கள், கப்பல், ரயில் என்று எல்லாத் துறைகளையும் தனியார்களுக்கு பிடுங்கிக் கொடுக்கத் தான் உதவிக்கு வருகிறானே உலகமயமாக்கல் என்கிற ராட்சதன்.

தனியார்கள் எல்லாவற்றையும் நடத்துவார்கள்.அவர்க்ள் தொழிலுக்கு பாதுகாவலனாக அரசுகள் இருக்கும். அப்படியே ஆளுபவர்கள் அந்தத் தொழில்களில் தங்கள் வாரிசுகளை பங்குதாரர்கள் ஆக்கிக் கொள்வார்கள். இதற்க்கெல்லாம் தேவை மக்களின் வாக்குகள்.

அதற்கு அரசாங்க கஜானாவை காலி செய்து இலவசங்களை கொடுத்துவிட்டால் போதுமே . இந்த நிலை நிடிக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி கொடுக்கிற மிக்ஸியையும், கிரைண்டரையும் வைக்க கூட நிலமில்லாமல் போகும் நிலை தமிழனுக்கு வரும்.

எல்லா நிலங்களும். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியாவிலுள்ள பெரிய நிறுவனங்களுக்கும் அரசே பிடுங்கிக் கொடுக்கும். அப்போதுதான் இலவசங்களை பெறும் இளிச்சவாயர்களுக்கு சொரணை வரும். ஆந்திராவிலிருந்து, நேபாளம் வரை நீண்டு, இந்தியாவையே மிரட்டிக்கொண்டிருக்கும் சிவப்பு தாழ்வாரத்தின் தீவிரவாத கர்ஜனையின் சத்தம் இங்கேயும் கேட்கத் துவங்கும்.

அந்த சத்தத்தின் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்ய இருக்கவே இருக்கிறது `ஃபேஸ் புக்' `டூவிட்டர்' போன்ற சமூக வலைப் பின்னல்கள். டூனிசியாவிலும், எகிபதிலும் ஒரு புரட்சியையே நடத்திக் காட்டியவர்கள் இந்த வலைப் பின்னல் வல்லுனர்கள்தான்.

இந்த வல்லுனர்களின் வலிமையை தமிழ்கம் புரிந்து கொள்ளும் நாள் வரும், அதுவும் விரைவில் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
அந்த நாள் வரும்போது ஆட்சியிலிருப்பவர்கள், வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் தங்கள் பணத்தை வைத்துக்கொண்டு ஏதாவது நாட்டில் குடிபெயர்ந்து விடுவார்கள். அப்போது பொருளாதார ரீதியிலும், வளர்ச்சியிலும் தோல்வியடைந்து விட்ட ஒரு மாநிலம் `a failed state ' என்று இப்போது தமிழகத்தின் பல திட்டங்களுக்கு கடன் உதவி செய்துவரும் அமெரிக்க நிதி நிறுவ்னங்கள், உலக வங்கி போன்றவைகளே விமர்சிக்கும்.

4 comments:

  1. உயர்ந்த அரசியல் திறனாய்வாளனுக்குத் தேவையான நேர்மையான பார்வை உங்களிடம் இல்லை என்பதை எப்போதோ அறிந்தவன். குறைந்த பட்சம்
    சொந்த வலைதளத்திலாவது நேர்மையைக் கடைபிடியுங்கள்.
    பாண்டியனஜி

    ReplyDelete
  2. (தி)முக-வைப் புகழ்ந்து எழுதினால் நேர்மை இருக்கிறதென்று ஏற்றுக்கொள்வீர்களா, பாண்டியன் ஜி?

    ReplyDelete
  3. உள்ள்தை சொன்னால் உடம்பு எரியும் என்பார்கள். அது
    போல , பாண்டியன் சொல்கிறார்...உயர்ந்த அரசியல்
    திறனாய்வாளன் என்றால் , மறத்துப் போய் கருத்து
    சொல்வதா? அல்லது பயந்து போய் , பஜனை கோஷ்டியில் சேர்ந்து கொண்டு, கொள்ளைக்கார கூட்டத்தை, குனிந்து வணங்குவதா?

    ReplyDelete
  4. I don't understand what Mr. Pandian means. What I feel is irrespective of whether JJ is good or bad(she's horrible,any day of the week), MK has to be ousted. To protect our businessmen and to prove that we still have self respect and care about our blood relations in SL, we should treat this election as a death-knell for MK's nepotism and DMK.
    Bharath Rajeswaran
    Ph.D student

    ReplyDelete