Apr 16, 2011

மாறும் உலகின் மகத்துவம்























என்னவாகும் தமிழக தேர்தல் முடிவுகள், தலைவர்களும், தொண்டர்களும், தமிழக வாக்காளர்களும் ஆவலோடு, ஆர்வத்தோடு, பரபரப்போடு, பதட்டத்தோடு, கொதிப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


தங்கள் விருப்பத்தையெல்லாம், `இப்படித்தான் இருக்கும் முடிவுகள்' என்று ஆருடம் சொல்லி தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.


மாறும் என்கிற நம்பிக்கை


மாறக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு.


இரண்டும்தான் இப்போது தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.


அடித்ததை பாதுகாக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.


இனியும் அடிக்கவிடக்கூடாது என்பது நம்பிக்கை.


மாற்றம் எனது மானிட தத்துவம்


மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்'


என்றார் கவியரசு கண்ணதாசன்.


நானும் அதை அறிவேன். 1967ம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான் வாக்குகள் 76 சதவிதத்திற்கு மேல்.அதற்கு இப்போதுதான் 78 சதத்தை தொட்டிருக்கிறது.


`இவர்கள் இருந்துவிட்டு போகட்டுமே' என்று மக்கள் நினைத்திருந்தால் வீட்டிலேயே இருந்திருப்பார்கள். வெளியே வந்திருக்கமாட்டார்கள்.


வெளியே மாசு படிந்த சூழல் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. `மாசு கட்டுப்பாட்டு வாரியம்' மாதிரி மக்கள் கிளம்பி வெளியே வந்திருக்கிறார்கள்.


இந்த எழச்சியின் விளைவுகள் என்னவாகும் என்பது தலைவர்களுக்குத் தெரியும். மேலே சொன்ன எதிர்பார்ப்பு, நம்பிக்கை அணித்தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போகும்.


நம்பிக்கை வீண்போகாது.


இதுதான் என் கணிப்பு.


காரணம் நான் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.





No comments:

Post a Comment