Mar 29, 2011

நீதி தூங்காது


மேலே உள்ள கார்ட்டூன் மஞ்சூள் என்பவர் வடக்கே உள்ள ஒரு பத்திரிகையில் வரைந்த கார்ட்டூன் இது. அது இப்போது தமிழகத்துக்கு மிக பொருத்தம். அங்கே மன்மோகன்சிங்கின் மானம், மரியாதையெல்லாம் காத்துக் கொண்டிருப்பது உச்சநீதி மன்றம் தான். சரி, தமிழக விஷயத்துக்கு வருவோம்.

நேற்று முன் தினம்தான் `கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது ?' என்று எழதியிருந்தேன். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ், வேணுகோபால் அடங்கிய பெஞ்ச் முதல்வர் கருணாநிதி தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் குறித்து முரசொலியில் கடிதம் எழதினார். அந்தக் கடிததத்தையே முகாந்திரமாக வைத்துக் கொண்டு, தேனீக்காரர் ஒருவர் மனு செய்திருந்த பொதுநல வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தேர்தல் கமிஷனுக்கு சில கேள்விகளை கேட்டார்கள் நீதிபதிகள். வாகன, வீடு சோதனைகளுக்கு சில நிபந்தனைகளையும் விதித்தது நீதியரசர்கள் தர்ம்ராவ் பெஞ்ச். இந்த வழக்கை ஏன் இத்தனை அவசரமாக் நீதிபதி தர்மராவ் பெஞ்ச எடுத்துக்கொண்டது என்பதில் நீதித்துறையைச் சேர்ந்த பலருக்கு வியப்பு! திகைப்பு ! தீர்ப்பைப் பற்றி பலவிதமான மேற்கோள்கள் உள்ளது. `ஒரு தீர்மானமான முடிவுக்கு வருவதற்கு முன்பாக, உங்கள் இதயத்தை வெற்றிடமாக் வைத்திருங்கள், முன்பே அங்கே குடியமர்த்தியிருந்த எண்ணங்களை விரட்டியடியுங்கள். இல்லையென்றால், என்ன செய்தாலும், சொன்னாலும் அது தவறான விதியாகவே கருதப்படும். காமாலைக்கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகவே பார்க்கும் நிலைதான் வரும்' என்றார் ஸர் பி. சிட்னி. `நம்மால் என்ன செய்ய முடியும் என்று நாம் நினைக்கிறோமோ அதை வைத்து நம்மை நாமே எடை போடுகிறோம். ஆனால் நாம் என்ன செய்தோமோ அதை வைத்துதான் மற்றவர்கள் நம்மை எடை போடுகிறார்கள்' லாங்பெல்லோ. இந்த மேற்கோள் ஏனோ நீதிபதி தர்மராவ் பெஞ்ச் உத்தரவைப் பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது. நேற்று 28.3.2011 இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஎம்.ஒய். இக்பால், டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இக்பால் சென்றவாரம் `லீவில்' போயிருந்தார். நீதிபதி தர்மராவ் பெஞ்ச் வழக்கில் நீதிபதி இக்பால் பெஞ்ச உத்தரவு வழங்கி சர்ச்சைக்கு ஒரு முற்று புள்ளி வைததது. `பொது நலனுக்காக தன்னிச்சையாக (சூ-மோட்டோ) ரிட் வழக்குகளை எடுப்பதற்கு முன்பாக ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மிகுந்த கவனம் தேவை. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுகளை மனதில் வைத்தே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது பத்திரிகையில் வந்த செய்தியை வழக்காக நிதிபதி எடுக்கும் பட்சத்தில் முன்னதாக அதுபற்றி தலைமை நீதிபதியிடம் தெரிவிக்காமல் இருப்பது முறையான செயல் அல்ல. சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பதைப் போல அரிதுக்கும் அரிதான விவகாரத்தில் மட்டுமே ஐகோர்ட்டு தலையிடலாம் மற்றபடி தலையிட முடியாது " என்று உத்தரவிட்டது தலைமை நீதிபதியின் பெஞ்ச். `இஸ்லாமிய நீதிபதி இக்பால் இந்துக்களின் புனித நதியான கங்கை சூதகமாகாமல் பார்த்துக்கொண்டுவிட்டார். வழக்கு, தீர்ப்பு என்று பார்க்காமல் நீதிபதி தர்மராவ் பெஞ்சின் நோக்கத்தை பார்க்க வேண்டிய கட்டாயம் குடிமக்களுக்கு இருக்கிறது. ` நீதி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்'. கட்ந்த இரண்டு வாரத்தில் நீதிபதி தர்மராவ் முன்பு வந்த இரண்டு வழக்குகளின் தன்மையைப் பார்க்க வேண்டும். 1. தமிழருவி மணியன் தன் வீட்டு வசதி வாரிய வீட்டை காலி செய்ய வேண்டுமென்கிற வழக்கு. அது தமிழக அரசிற்கும், தமிழருவி மணியனுக்கும் நடக்கிற மோதலின் பின்னனி. மணியனின் வழக்கில் அப்பழக்கற்ற நீதிபதி என்று பெயர் வாங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு` தமிழக அரசு தமிழருவி மணீயனை பழி வாங்கும் நோக்கில் நடந்துகொண்டிருக்கிறது' என்று தீர்ப்பு வழங்கி,வீட்டு வசதி வாரிய நடவடிக்கைகளுக்கு முற்ற்ப் புள்ளி வைத்தார். தமிழருவி மணியன் ஜீனியர் விகடனின் கலைஞருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழதினார். அதில் கலைஞரைப் பற்றிய க்டுமையான விமர்சனங்கள் இருந்தன. உடனே இதை நாட்டின் தலையாய பிரச்னையாக எடுத்துக்கொண்டு, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி இக்பால் விடுப்பில் போயிருந்த நேரம். தமிழருவி மணியன் தரப்பு வாதத்தை கேட்காமலே ஒரு சில நிமிடங்களில் அவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. வழங்கியவர்கள் நீதிபதிகள் தர்மராவ், வேணுகோபால். 2. கலைஞர் தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளை கண்டித்து `முரசொலி'யில் கடிதம் எழதுகிறார். ஒரு பொது நல வழக்கையும், இந்த கடிதத்தையும் தன்னிச்சையாக (சூ-மோட்டோவாக) எடுத்துக்கொண்டு, தேர்தல் கமிஷனுக்கு நிபந்தனை போடுகிறது நீதிமன்றம். இந்த நிபந்தனைகள் பெஞ்சுக்கு தலைமை நீதிபதிகள் தர்மராவ், வேணுகோபால். `நீதிதான் ஒரு தேசத்தின் அடிப்படை உணவு; அதற்காக எல்லா தேசங்களுமே எப்போதுமே பசியோடு காத்திருக்க்கிறது' பிரையண்ட். தமிழக மக்களின் ஒரு வேளைப் பசியை போக்கியிருக்கிறார் தலைமை நீதிபதி இக்பால்.

2 comments:

  1. நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ
    நாணிலாது கெஞ்சுவாய் போ போ போ
    சென்று போன பொய்யெலலாம் மெய்யாகச் சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ ...

    என்றும்
    மானம் சிறிதென்றெண்ணி - வாழ்வு பெரிதென்று எண்ணும் ஈனர்க் குலகந்தனில்- கிளியே இருக்க நிலைமையுண்டோ?

    என்றும்

    சொன்னது தான் இத்தேர்தல் காலத்தில் நினைவுக்கு வருகிறது_ ரோமிங் ராமன்

    ReplyDelete
  2. நீதி தூங்காது என்பதெல்லாம் அக்காலம்... இங்கே படியுங்க... தெரியும்......
    http://sagamanithan.blogspot.com/

    ReplyDelete