Mar 24, 2011

கங்கையே சூதகமானால் எங்கே முழ்குவது ?



தேர்தல் அணுகுமுறை, எதிர்கட்சிகளில் குழப்பம் விளைவிப்பது, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை தன் கட்சி விசுவாசியாக மாற்றுவது, கூட்டணி கட்சிகளை குலைப்பது, தேர்தல் தில்லுமுல்லுகள்,வாக்குகளுக்கு பணம் எப்படியெல்லாம் கொடுக்கலாம், எதிர்கட்சிகளின் மீது எப்படி சேற்றை வாரி இறைத்து தன் தவறுகளை மறைக்கலாம். இந்த தலைப்புகளில் ஒரு சிறு புத்தகம் அச்சடித்து வாக்காளர்களுக்கு திமுக கொடுக்கலாம்.

அந்த அளவுக்கு சகல கலைகளிலும் கைதேர்ந்தவர் திமுக தலைவர் கலைஞர். தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் தமிழக மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற கட்சிகள் அதிகம் சத்தம் போடாதபோது, திமுக தலைவருக்கு அது பெரும் தலைவலியாக மாறிவிட்டது.

முதலில் தேர்தல் ஆணையத்தின் தலைவர் குரேஷியை சந்தித்துவிட்டு வந்த திமுகவின் டி.ஆர். பாலு. விவசாயிகள், வியாபாரிகளின் வாகனங்களில் சோதனை போட்டால் சட்டம் ஒழங்கு பிரச்னை ஏற்படும் என்று எச்சரிக்கை விட்டார்.

அதைத் தொடர்ந்து 23.3.2011 அன்று கலைஞர் முரசொலியில் தேர்தல் கமிஷனை கண்டித்து `தேவர் திருமகனின் திருமொழி என்ன ? உடன்பிறப்புக்கு கடிதன் எழதினார்.

அதில் ` தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்கிற பெயரில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஒரு கொடுமை கட்டவிழ்த்து விட்ப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் யாரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லக்கூடாது. இதைப் பற்றி அன்றாடம் ஏடுகள் ஒவ்வொரு செய்தியை தாங்கி வெளிவருகின்றன். ஏன், மாலை இதழ் ஒன்றில் நேற்று வந்த செய்தியிலே கூட - தேர்தல் கமிஷன் கெடுபிடி - வாகன சோதனையில் காமெடி காட்சிகள் - ஆடு, கொலுசுகளைக் கூட விடவில்லை என்று கொட்டை எழத்துகளில் செய்திகள் வந்துள்ளன.

அந்தச் செய்தியில் ` தேர்தல் என்றாலே தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி, வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மாறி மாறி கார்களில் வந்து பிரச்சாரம் செய்தபடி இருப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பிரச்சாரச்சத்தம் காதைப் பிளந்த வண்ணம் இருக்கும். அரசு சுவர்கள்,தனியார் சுவர்களில் சின்னங்கள் தேர்தல் வாசகங்கள் எழத முன் கூட்டியே இடம்பிடித்து விடுவார்கள். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் பெயர் எழதுவது வாசகம் எழதுவது மும்முர்மாக இருக்கும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா போல ஊரெங்கும் களை கட்டி விட்டும். ஆனால் இந்தத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் போட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக வாகன் சோதனை, வியாபாரிகளையும் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் முடக்கிப்போட்டு விட்டது. நகைக்கடைக்காரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் அன்றாடம் வசூல் அகும் வியாபார பணத்தி வங்கியில் கட்ட எடுத்துச் செல்வார்கள். இப்போது அவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்ல முடியவில்லை. வ்வாகன் சோதனையில்ல் சிக்க்கினால் அதிகாரிகள் பாறிமுதல் செய்து விடுகிறார்கள். இது போல் நிலம் வாங்க - விர்க ஏடுத்துச் ச்செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை நடந்த சோதனையில் எந்த அரசியல் பிரமுகரிடமும் பணம் சில்லவில்லை என்பதுதான் வேடிக்கை ' என்று ப்ர்ரசுரிக்கப்படுள்ள்து. இப்படியெல்லாம் எழதி முடிவில் தேர்தல் ஆணையம் இதைப் பற்றியெல்லாம் கவலைப்ப்டுகிறதா ? ` மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் - கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது ?' என்று தேவர் ட்திருமகன் அடிக்கடி கூறிய பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
என்று தன் கடிதத்தை முடித்திருக்கிறார்.

தேர்தல் கமிஷனின் இந்த கெடுபிடிகளை எதிர்த்து தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி திருவள்லுவர் நகரைச் சேர்ந்த ஆசிரியர் தில்லை நடராஜ்ன் ஒரு பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற் நீதிபதிகள் தர்மராவ், வேணுகோபால் அடங்கிய பெஞ்ச முதல்வரின் கடிதத்தை வைத்து இந்த வழக்கை தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

`இந்த வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாடுகளுக்கு முகாந்திரம் காட்டப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷனுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. `நம்பத்தகுந்த தகவல் வந்தால், அது சரியானதுதானா என்று கணடறிந்ந்து திர்ருபதி ஏற்பட்ட பிறாகுதான் சோதனையிலோ, பறிமுதல் நடவடிக்கையிலோ தேர்தல் கமிஷன் இறங்க வேண்டும் போன்ற சில தடைகளை விதித்திருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்தத் தடைகள் தேர்தலுக்கு முன் விபரீதங்கள் விளைவிக்கத்தான் போகிறது. முதலில் தேர்தல் கமிஷன் ஏன் இத்தனை கெடுபிடிகளை விதிக்கிறது என்று பார்க்க வேண்டும். நடைமுறையில் கட்சிகள் தேர்தல் நேரத்தில் எத்தனை கேலிக்கூத்துக்களை அரங்கேற்றுகிறது என்பதை கண்டறிந்து பிற்குதான் இந்த கெடுபிடிகள்.

வாகன சோதனையில் ஏன் கலைஞருக்கு மட்டும் ஏன் இத்தனை கவலை ? தேர்தல் என்பது ஒரு மாத திருவிழா தான். ஒரு நாட்டின் தலையெழத்தையே தீர்மானிக்கும் தேர்தலுக்கு குடிமக்கள் சில இடைக்கால தடைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதா ?

நியாயமான செலவுகளுக்காக, அல்லது வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்படும் பணத்தை உரிய ஆவணங்களைக் காட்டினால் பறிமுதல் செய்வதில்லை.

பல வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலை இப்போது இல்லை. முன்பு தேர்தல் பிரச்சாரத்துக்கு சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் தேவைப்பட்டது. இப்போது தான் ஊடகங்கள் தான் பெருகிவிட்டதே. அதுவும் ஆளுங்கட்சிக்கு இல்லாத ஊடக பலமா? திருவாரூரில் நடந்த கலைனரின் தேர்தல் பிரச்சாரத் துவக்க கூட்டத்தில் நடிகர் வடிவேலு, விஜயகாந்த் மீது நடத்திய தரங்கெட்ட தனிநபர் விமர்சனத்தை கூட நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் அகமகிழ்ந்து கேட்டதைத்தான் உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் பல முறை காட்டி மகிழ்ந்து போகீறீர்களே ?

வியாபாரிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல இப்போது வழியா இல்லை. தேசிய வங்கிகளில் ஒரு கிளையிலிருந்து குறைந்த நேரத்தில் பணத்தை மாற்றிக்கொள்ள முடியுமே ? அந்த மாற்றுதலுக்கான வங்கிக் கட்டணம் கூட வாகன பெட்ரோல் செலவை விட குறைவானதுதானே ? உதாரணமாக உங்கள் திருவாரூரையே எடுத்துக்கொள்ளுங்கள், மதுரை `வியாபாரி' திருவாரூருக்கு பணம் எடுத்துக்கொண்டு வரவேண்டுமானால், அதுவும் அது ஒரு நியாயமான பரிவர்த்தனையாக இருந்தால், வங்கியில் போதிய காரணத்தை சொல்லி மதுரை வங்கியில் திருவாரூர் வங்கி எண்ணுக்கு அனுப்பிவிடமுடியும். அதுவும் இரண்டு மணி நேரத்தில் !. ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் ஐந்து ரூபாய்தான் வங்கிக் கட்டணம்.

மதுரையிலிருந்து திருவாரூருக்கு காரில் பணம் எடுத்துச் சென்றால் பெட்ரோல் செலவு என்ன ? கணக்குப் போட்டு பாருங்கள். இந்த சோதனைகள் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சில கட்சிகளுக்கு பயத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்பதுதான் உண்மை.இதுவரையில் சிக்கிய பணம் எதுவும் அரசியல்வாதிகளிடமிருந்து எடுக்கப்பட்டதல்ல என்கிறார். அரசியல்வாதிகளிடம் தேர்தல் நேரத்தில் பணத்தை கொடுத்தனுப்ப நீங்கள் என்ன அத்தனை இளிச்சவாயர்களா என்ன ? பண பரிவர்த்தனைக்குதான் உங்களிடம் எத்தனை `ஸ்வான்' வியாபார நிறுவனங்கள் இருக்கிறது ?
ஏற்கெனவே எந்த முறைகளிலெல்லாம் உங்கள் கட்சி பண பட்டுவாட செய்திருக்கிறது என்று பல தகவல்கள் அன்றாடம் வந்து கொண்டுதானேயிருக்கிறது.

இந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற தர்மராவ் பெஞ்ச அவரசமாக எடுத்துக்கொண்டுள்ளது. இந்த பெஞ்சின் சமீப கால தீர்ப்புகள் பல ஆளுங்கட்ச்சிக்கு சாதகமாகவே தானிருக்கிறது. உதாரணம் சொல்ல வேண்டுமானால் சென்னை டைலர் ரோட்டிலுள்ள டவர் பளாக்கில் இருக்கிறார் காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவரும், எழத்தாளருமான தமிழருவி மணியன். இவர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் குடியிருக்கும் வீடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது.

அரசு பல தொந்தரவுகளைக் கொடுத்து அவரை காலி செய்ய கெடுபிடி செய்தது. அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபது சந்துரு ` இது அரசின் பழிவாங்கு நடவடிக்கை என்று சொல்லி அரசின் நடவடிக்கைக்கு தடை விதித்து தமிழருவி மணியனின் வயிற்றில் பால் வார்த்தார்.

சென்ற வாரம் கலைஞருக்கு ஜீனியர் விகடனில் ஒரு பகிரங்க கடிதம் எழ்தினார். தமிழருவி மணியன். உடனே விழித்துக்கொண்டது. அரசு. அவசர அவசரமாக தர்மராவ் பெஞ்சுக்கு வழக்கை கொண்டு போனது. அவரும் மிக அவசரமாக வழக்கை எடுத்துக்கொண்டு, எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு பேசக் கூட வாய்ப்ப்பு கொடுக்காமல், நீதிபதி சந்துருவின் தீர்ப்பு செல்லாது என்று சில நிமிடங்களிலேயே தீர்ப்பு சொல்லப்பட்டது. ஏன் இத்தனை அவசரம்?

ஒரு மனிதனின் வார்த்தை என்பது எந்த மனிதனும் வார்த்தையுமாகாது. பொறுமையாக இருதரப்பையும் கேட்கவேண்டும் ' என்று நீதியைப் பற்றி கதே சொன்னான். இதை நீதிபதி தர்மராவ், வேணுகோபாலுக்கு யார் சொல்வது ?

கலைஞர் சொன்னது மாதிரியே தேவர் திருமகனின் பொன்மொழிப்படி `மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம். அந்த கங்கையே சூதகமானால் ?

2 comments:

  1. இதே நிலைமை தேர்தலுக்கு முன்பு ஆறு மாதமும் பின்பு ஆறு மாதமும் இருக்க வேண்டும். பில் போடாமல் நடக்கும் வியாபாரம் எல்லாம் நின்று விடும். இப்போது தான் அரசாங்கம் என்று ஒன்று இருப்பது போல் இருக்கிறது. பிளெக்ஸ் போர்டு இல்லாமல் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல் இவர்கள் அலறல் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறது. இதே போல் நடைபாதை ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் நடப்பதற்கு பாதை இருக்கும். விபத்துக்கள் குறையும்.
    உங்கள் தைரியமான பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  2. Sir, evunga arasiyal la idhu romba saadharanam sir. For ADMK, rigging the polls or bribing is an art. For DMK, it is their only science. Sad that we do not have any alternative other than that sick self boasting JJ. But, we should live to fight her another day. Now is the time to send DMK to shambles.

    ReplyDelete