பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடது சாரிக்கட்சிகள் தமிழகத்திலும் அவர்கள் ஆட்சி செய்யும், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கத்தில் இம்மாதம் 7 ந்தேதி பந்த அறிவித்திருக்கிறது.விலை உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிகத்தில் தங்கள் செய்றகுழவைக் கூட்டி அடுத்த கட்டம் என்ன? என்பதை விவாதித்துக்கொண்டிருந்தபோது, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி. கே ரங்கராஜனை தொடர்பு கொண்டோம்.
`எண்ணேய் நிறுவனங்களின் நிதி நிலையைப் பற்றியே கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. அவர்களின் சென்ற வருட லாப சேமிப்பு என்னவாயிற்று?
நாம் கொள்முதல் செய்கிற இடத்தில் மற்ற நாடுகளும் கொள்முதல் செய்கிறது. பல நாடுகளில் நம்மை விட பெட்ரோல், டிசல் விலை மலிவாக இருக்க காரணம் என்ன ?
இந்திய அரசு சுங்க, கலால் வரியை போட்டு மக்களை சுரண்டிக்கொண்டிருக்கிறது. இந்த விலையேற்றத்தை வெறும் பெட்ரோல், டீசல் உயர்வாக மட்டும் பார்க்க கூடாது. இதனால் சோப்பு, சீப்பு, கண்ணாடியிலிருந்து சகல பொருட்களின் விலைகளும் கூடு. அதனால்தான் இம்மாதம் 7ந் தேதி நாடு தழவில் பந்த் அறிவித்திருக்கிறோம்.