Jun 4, 2008

கிளம்பிய எண்ணெய் பூதம்


எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெட்ரோல் விலை உயர்வு என்கிற பூதம் கிளம்பிவிட்டது.பெட்ரோல் 5 ரூபாய், டீசல் 2 ரூபாய். சமையல் கேஸ் ரூ 50 உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது.நகரத்து மக்களையே மையமாக வைத்து இயங்கும் இந்திய ஊடகங்கள் வழக்கமான அரசியல் தலைவர்களின் அவர்களின் சந்தர்ப்ப வாத கொள்கை முழக்கங்களை வெளிட்டு கொண்டிருக்கின்றன.


கூடவே தொலைகாட்ட்சி ஊடகங்கள் பொதுத்துறை எண்ணெய நிறுவனங்களின் நிதி நிலை மோசத்தை பற்றி நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன.உண்மையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிலைமை அவலமாகத்தான் இருக்கிறதா?


உதாரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை எடுத்துக்கொள்வோம்.இது அவர்களே அவர்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கை.


உலகத்திலேயே சிறந்து விளங்கும் 500 பணக்கார நிறுவனங்களின் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக திகழ்வது இந்தியன் ஆயில் கார்ப்பேரஷன்


வியாபாரத்தில் பல சவால்களும், மோசமான சூழலும் இருந்தும் கூட இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டிருகிறது.


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி ` 2007-2008ம் வருடம் சுங்க வரி செலுத்தியது போக ஈட்டிய வருமானம் ரூ 2,47,479 அதற்கு முந்தைய ஆண்டின் வருமானம் ரூ 2,20,779.


. சென்ற ஆண்டு லாபம் ரூ 5,997 கோடி, இந்த ஆண்டு லாபம் 7,377 கோடி. பெட்ரோல், டிசல் விற்பனையில் மட்டும்தான் தினமும் ரூ 320 கோடி நஷ்டம் என்று சொல்லுகிற நிறுவனம் தங்களின் விற்பனை மையங்கள் அதிகரித்திருப்பதையும் அதனால் வருகிற லாபத்தையும் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறது.


சரி, நஷ்டத்தில் இருக்கிற இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த ஆண்டு பங்குதாரர்களுக்கு டிவிடண்டாக எப்படி 55% மாக அறிவித்திருக்கிறது. சென்று லாபத்திலிருந்து வைத்துள்ள அதிகமான ரிசர்வ் பணம் என்னவாகிறது. இந்த கேள்விகளை பற்றியெல்லாம் நகர்ப்புற மக்களான நமக்கு என்ன கவலை? கவலையை மறக்க எத்தனையோ ஊடகங்களின் வரும் மெகா சீரியலின் கதாபாத்திரங்களோடு நாமும் அழது தொலைத்து, நாளைக்கு அந்த கதாபாத்திரத்திற்கு என்ன ஆகும் என்கிற கவலையில் முழ்குவோம்,.