Apr 12, 2011

ராபர் க்ளைவ்வும், கருணாநிதியும் !

ராபர்ட் க்ளைவ் நாளை நான் வாக்களிக்கப்போகிறேன். நீங்களும் அதை செய்வீர்கள், செய்ய வேண்டும்.உங்கள் ஒரு நாள் அதிகாரத்தை நீங்கள் நழவ விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடிமை சாசனத்தில் கையெழத்திட்டுவிட்டிர்கள் என்றுதான் பொருள். அதற்கு முன் என் வலைப்பதிவில் வாக்காளர்களுக்கு என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பெங்களூரிலிருந்து என் எழத்தாள நண்பர் அமுதவன் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரது இணையதளத்தில் ` கருணாநிதியா ? ஜெயலலிதாவா ? என்கிற தலைப்பில் அவர் எழதியதைப் பார்க்க சொல்லியிருந்தார். அமுதவன் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவன் நான். ஒழக்கமான எழத்திற்கும், வாழ்க்கைக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட ஒரு மன ஒழக்கம் இருப்பதால்தான் அவர் இன்றைய தமிழக தேர்தல் களத்தை சித்தாந்த ரீதியாக அலசியிருக்கிறார். எனக்கு சித்தாந்த அறிவைவிட, யதார்த்த அனுபவம் கொஞ்சம் உண்டு. காரணம் அடிப்படையில் நான் ஒரு செய்தியாளன். தமிழகத்து தலைவர்களுக்கு என்னைத் தெரியும்.நண்பர் அமுதவனைப் போல படைப்பாற்றல் மிக்க எழத்தாளனில்லை நான். இந்த தேர்தல் என்பது கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் நடக்கும் போட்டி என்று தமிழக மக்கள் நினைக்கவில்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கும், தமிழக வாக்காள குடும்பங்களுக்கும் நடக்கும் போட்டி. என் இணையதளத்தில் நான் மார்ச் 14 2011ல் `தமிழகத்தில் நடக்கப்போவது தேர்தலா > சுதந்திரப்போராட்டமா என்று எழதியிருந்தேன். அதுதான் உண்மை. அன்று பிரிட்டிஷின் ராப்ர்ட் க்ளைவ், இன்று கலைஞர் கருணாநிதி. 1725ல் இங்கிலாந்தில் பிறந்த க்ளைவிற்கு படிப்பு ஏறவில்லை. ஆனால் இலக்கிய நடையும், பேச்சுத்திறனும் இருந்தது. 1924ல் திருக்குவளையில் பிறந்த கலைஞருக்கும் இந்த இரண்டு திறன்களும் உண்டு. ராபர்ட் க்ளைவ்வைப் பற்றி குறிப்பு ஒன்றில் ` கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரர், நிர்வாகி, அவர்தான் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் வருவதற்கு காரணமாக இருந்தார்’ என்கிறது. கலைஞரும், ஆரம்ப நாட்களில் அண்ணா போர்படையின் செயல்வீரர், நிர்வாகி. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்திய ராபர்ட் க்ளைவ், சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஏராளமான சொத்துக்களை சேர்த்துக் கொண்டார். இதுவும் கலைஞர் கருணாநிதிக்கு பொருந்தும். இதே ரீதியில் ஒப்பிட்டால் கலைஞரை நவீன ராபர்ட் க்ளைவ் என்றே சொல்லலாம்.ஆனால் இருவருக்கும் வேறுபாடுகள் நிறையவே உண்டு. ராபர்ட் க்ளைவ், அல்லது அதற்குப் பிறகு நம்மை ஆண்ட பிரிட்டிஷாரோ தங்களுக்கு நம்பிக்கையாக இருந்தவர்களை அழித்ததில்லை. ஆனால், கலைஞர் விஷயமே வேறு. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்குப் போகும்போதும், அந்த ஊரிலிருந்த, தன்னோடு பழகிய பழைய திமுக நண்பர்களின் பெயர்களையெல்லாம் கண்ணீர் மல்க பட்டியிலிட்டார்'. உதாரணம் மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டம். மதுரையின் முன்னாள் மேயர் முத்து, பிடிஆர் பழனிவேல் ராஜன், கமபம் ராஜாங்கம், காவேரிமணியம், கம்பம் நடராஜன், போடி முத்துமனோகரன், மதுரை கிருஷ்ணன் ( இவர் தான் அழகிரியின் ஆட்களால் கொல்லப்படதாக வழக்குத் தொடரப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருஷ்ணன். இவரது இனிஷியலை சொன்னால் பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்துவிடுமாம். அதனால் அவர் சொல்லவில்லை).எஸ்.எஸ். தென்னரசு. கலைஞர் கருணாநிதி பட்டியலிட்ட அவர்களின் இன்றைய நிலை என்ன? மதுரை முத்துவின் குடும்பம் இந்தியாவிலேயே இல்லை. பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஒரே மகனும் இப்போது அமெரிக்காவில்!.மதுரை எம்ஜிஆரின் கோட்டையாக இருந்தபோது, அங்கே திமுகவின் படைவீரராக இருந்தவர் காவேரிமணியம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டபோது, அவரை தன் பிள்ளையாக பார்த்துக்கொண்டவர் காவேரிமணியம். அவர் இறந்தபின், அவரது மனைவியும், பிள்ளையும் அழகிரியைப் பார்க்கக் கூட தவம் கிடந்த கதையை மதுரை மக்கள் நன்கு அறிவீர்கள். தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம், அவரது வாரிசுகள் அரசியலுக்கு வராமல் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். இப்படி ஒரு மாவட்டத்திலும், அவர் பட்டியலிட்ட முன்னாள் திமுகவினருக்குப் பின்னால் பல சோக கதைகள் உண்டு. .தங்களுக்கு உழைத்தவர்களுக்கு சொத்தும், பரிசும் கொடுத்து மகிழ்ந்தது பிரிட்டிஷ் அரசு.
ஆனால் இன்றைய `க்ளைவ்’ சாம்ராஜ்யத்தில் கட்சிக்காக பல வ்ருடங்கள் மாடாக உழைத்த உடன்பிறப்புக்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது. ஆனால் திமுகவிலிருந்து, அதிமுகவிற்குப் போய் அங்கேயும் பதவி சுகம் அனுபவித்து அவர்கள் மீண்டும் திமுகவிற்கு வந்தால் அவர்களுக்குத்தான் பதவி. உதாரணம், தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன், எ.வ.வேலு,அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வகணபதி, அங்கே அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷணன், கருப்பசாமிபாண்டியன், ஜெகத்ரட்சகன் இவர்கள்தான் கலைஞரின் சொத்துக்களுக்கும், அன்புக்கும் பாத்திரமானவர்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் சொத்துக்கள் பத்திரமாக இருந்தன. போகும்போது கூட அதை அவர்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை. குறிப்பாக இந்தியா விவசாய நாடு, அதன் வளங்கள் மிகவும் முக்கியம் என்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள். அதனால் விவசாய நிலங்களையும், விவசாயப் பயிர்களையும் பாதுகாத்தார்கள்.


நம்முடைய க்ளைவ் ராஜ்ஜியத்தில் நடப்பது என்ன ? தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளை நிலன்களும், வெள்ளாமையும் அழிக்கப்படுகின்றன.அதிலே அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், தனியார் மருத்துவ, பொறியியற்க் கல்லூரிகள் இவையெல்லாமே அந்தந்த மாவட்ட திமுக அமைச்சர்களுக்கு, அவர்களது பினாமிகளுக்கும் சொந்தம். மாவட்டங்களில் குடியிருப்புக்களும், நிலங்களையும் மிரட்டியே வளைத்துப் போட்டுக் கொண்டதை மக்கள் கண்ணீரோடு பார்க்கிறார்கள்.

மதுரை அருகேயுள்ள சீவ்ரக் கோட்டையில் அழகிரியின் மனைவி காந்தி பெயரில் எழம்பி வரும் கல்லூரி விளைநிலத்தில் அல்லவா வளர்ந்து நிற்கப்போகிறது.


5,000 வருட உலக சரித்திரத்தில், ரோமானியர்களைத் தவிர யாரும் விவசாய, வெள்ளாமை கூறுகளை அழித்ததாக வரலாறே இல்லை. அதிலும் வரலாற்று நாயகர் கலைஞர்தான்.


பிரிட்டிஷ் ஆட்சிக்கு கப்பம் கட்ட மறுத்ததினால்தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்கு. கப்பம் கட்டி விசுவாசமாக இருந்த குறுநில மன்னர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி தொந்தரவு கொடுக்கவில்லை. ஆனால், இன்று மக்களை மிரட்டி அல்லவா அவர்களது சொத்துக்கள் திமுக களவீரர்களால் ஆக்ரமிக்கப்படுகிறது.

உதாரணம் திருச்சி. அங்கே அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்குகிறார்கள். மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், வாடகைக்கு கூட வீடு கிடைக்காது. காரணம் இவர்களே எல்லா வீடுகளையும் வாங்கி வணிக வளாகங்களை கட்டி விடுவார்கள் என்று மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.


`சதி’ என்கிற பெயரில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் பழக்கம் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் இருந்தது. இதை ராஜாராம் மோகன் ராய் எதிர்த்தபோது, அதற்கு தடை போட்டு பெண்களின் வாழம் உரிமையை நிலைநாட்டியது வெள்ளைக்கார அரசு.

ஆனால், இவர்களது ஊடகங்களின் காட்டப்படும் பெண்களின் நிலை இன்று என்ன ? படி தாண்டுகிற பத்தினிகள்தானே இன்று இவர்களின் நெடுந்தொடர் கதாநாயகிகள். பல குடும்பபெண்கள் இந்த நெடுந் தொடர்களைப் பார்த்து மனநோயாளியாகிப் போவதுதானே உண்மை.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள். ஆனால் நம் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை. இன்று அத்தனை கலாச்சார சீர்கேடுகளுக்கும் பிரச்சாரம் இவர்களது ஊடகங்கள் வாயிலாகத்தானே நடக்கிறது. சினிமா, ரிகார்ட் டான்ஸ் தவிர, அறிவு பூர்வமான நிகழ்ச்சியை இந்த ஊடகங்களின் பார்க்க முடியுமா ?


இன்னும் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் இது தமிழ்நாட்டு வாக்காள குடும்பங்களின் அன்றாட பிரச்னை, பீதி.

இந்தக் கொடுமைகளுக்கு மாற்று சக்தி ? கடலில் முழ்குகிறவன் எதையாவது பற்றிக்கொள்ளத்தான் துடிப்பான். அந்த `பற்று’தலுக்கான ஒரு கருவிதான் அதிமுக.

இங்கே கலைஞர் குடும்பம் என்றால், அங்கே சசிகலா குடும்பம் என்று ஒப்பிடலாம்.

சசிகலா குடும்பம் விற்பவர்களின் பொருடகளைத்தான் வாங்குவார்கள்.

கலைஞர் குடும்பம் விற்க விரும்பாதவர்களின் பொருடகளையும் சொத்துக்களையும், மிரட்டியே வாங்குவார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில், அடுத்தவர்கள் தொழில்களில் தலையிடமாட்டார்கள். அதற்கான புத்தியோ, சாதுர்யமோ அவருடனிருப்பவர்களுக்கு கிடையாது, தெரியாது.

தங்களைத் தவிர யாரும், எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்பதுதான் கலைஞர் குடும்பத்தின் தரக மந்திரம்.

இந்த தேர்தலில் இனவாதம், எம்ஜிஆர் அபிமானிகள், இலங்கை விவகாரம், 2 ஜி இதைப் பற்றியெல்லாம் திருவாளர் பொதுஜனத்திற்கு கவலையில்லை.

இனியும் திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகத்தில் இருப்பது பாதுகாப்பா? அல்லது வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்துவிடலாமா என்பதுதான் தமிழக வாக்காளர் மனதில் இன்றுள்ள கேள்வி.

3 comments:

  1. இதே பதிவு இரு முறை வந்து உள்ளது. இதற்கு முன்பு வெளியானதை நீக்கவும். நன்றி

    ReplyDelete
  2. மிகச்செறிவான கட்டுரை- இன்றைய தலைமுறைக்கு அவசியம் தெரிய வேண்டிய திமுக (திருக்குவளை முத்துவேல் கருணாநிதி) சரித்திரம்!!
    //கலைஞர் குடும்பம் விற்க விரும்பாதவர்களின் பொருடகளையும் சொத்துக்களையும், மிரட்டியே வாங்குவார்கள்//
    வன்மையாகக் கண்டிக்கிறேன்.. பிடுங்குவார்கள் என்பதுதான் சரி!! (வாங்குதல்-பணம் தர வேண்டும்!)
    இக்கட்டுரையை ரசிக்கும்,ஒவ்வொருவரும் தேச பக்தர் என்று சொல்லிவிடலாம்,.. அவர்கள் நிச்சயம் சகமனிதன் www.sagamanithan.blogspot.com
    கட்டுரைகளையும் ரசிப்பார்கள்!!

    //பெங்களூரிலிருந்து என் எழத்தாள நண்பர் அமுதவன்// -- சார்.. ஒரு லிங்க் (/URL) கொடுக்கக் கூடாதா? நாங்களும் வாசிப்போமே!!

    எனக்குத்தெரிந்த ஊடகவியலாளர்கள் மாற்றம் வரும் என்றும்.. நிச்சயம் நடக்கும் என்றும் நம்புகிறார்கள்.. பார்ப்போம்.
    -உங்களில் ஒருவன்.

    ReplyDelete