தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நட்டத்துவதற்காக தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.எம். குரேஷி சென்னைக்கு வந்திருந்தார்.
ஒவ்வொரு அரசியல் கட்சியினரையும் அழைத்து அவர் தலைமையிலான குழ ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., திமுக அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம், தலைமை நிலைய செயலாளர் கிரிராஜ்ன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்து வெளியே வந்த பாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
`சிறு வியாபாரிகள், விவசாயிகள் பொருட்கள் வாங்குவதற்காக எடுத்துச் செல்லும் பணத்தை தேர்தலுக்காக எடுத்துச் செல்லுகிறார்கள் என்று கருதி,அந்தப் பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். காங்கேயத்தில் இருந்து கோவைக்கு பணம் எடுத்துச் சென்ற தேங்காய் வியாபாரியிடம் தேர்தலுக்கு பணம் கொண்டு போவதாகச் சொல்லி அதிகாரிகள் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரீல் `பெட் சீட்' த்யாரிப்பு குடிசை தொழிலாக நடந்து வருகிறது. அந்த வியாபாரிகள் 20 பேர் அல்லது 30 பேர் சேர்ந்து தங்கள் தயாரித்த `பெட் சீட்'டுகளை விற்பனை செய்வதற்காக லாரிகளில் எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட `பெட் சீட்'டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் இந்த செயல் அபத்தமானது. வியாபாரி. விவசாயிகளிடம் பணத்தை பறிமுதல் செய்தால் தகராறு ஏற்பட்டு, சட்டம் ஒழங்கு பிரச்னைதான் ஏற்படும்' என்று சொல்லியிருக்கிறார்.
இதன் மூலம் பாலு என்ன சொல்ல வருகிறார் ? இப்படி நாங்கள் வேறு வழிகளில் பணம் எடுத்துச் செல்வதை போலீஸ் தடுத்தால் எங்கள் திமுக தொண்டர்க்ள் கொதித்து எழவார்கள். சட்டம்- ஒழங்கை நிலை குலையச் செய்து விடுவோம் என்று தேர்தல் ஆணையத்திற்கு சொல்வதன் மூலமாக எச்சரிக்கை விடுக்கிறாரா ?
அல்லது திமுக எந்த முறையிலெல்லாம், பணத்தை தொகுதிகளுக்கு கொண்டு போகிறது என்பதற்கு உதாரணமாக இந்த தேங்காய், பெட் சீட் வியாபார்கள் விஷயத்தை பூடகமாக போட்டு உடைக்கிறாரா ?
நம்முடைய இந்த இரண்டு கேள்விகளில் இப்போது முதல் கேள்வியைக்
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். ஒரு நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு எத்தனை வாகனங்கள் போகிறது. அதில் தனியார் வாகனங்கள், டூரிஸ்ட் கார்கள், லாரிகள், கனரக வாகனங்கள். அரசுப் பேருந்துகள் என்று பலவிதமான வாகனங்கள் செல்கிறது. இதில் எத்தனை பேர் வியாபாரிகள்? அதில் எத்தனை வியாபாரிகள் கத்தை கத்தையாக பணத்தை எடுத்துக்கொண்டு போகிறார்கள்.?
இப்போது பணப்பட்டுவாடாவிற்கு பணத்தை ரொக்கமாக கையில் எடுத்துக்கொண்டு போக வேண்டிய அவசியமேயில்லை.காங்கேயம் வங்கி கிளையில் பணத்தை செலுத்தினால், கோவை கிளையில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதுவெல்லாம் நம்மை விட வியாபாரிகளுக்கு நன்றாகவே தெரியும். சரி, `பெட் சீட்' விவகாரத்திற்கு வருவோம்.அதற்கான முறையான காகிதங்கள் இருந்தால் ஏன் பிடிக்கப்போகிறார்கள்?
வங்கி ஏடிஎம்களுக்கு போகிற பணத்தையே உரிய தஸ்தாவேஜீகள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஒரு வங்கிக் கிளையிலிருந்து ஏடிஎம்களுக்கு போகிற பணத்திற்கு உரிய காகிதங்களை கொடுக்காதது யாருடைய தவறு ?
தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளுக்கு பால பாடம் கற்க வேண்டுமானால் அறிவாலயத்திற்கு போகலாம் என்று பேரக் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் படிப்ப்றிவில்லாத பாட்டிகளுக்குக் கூட தெரியும்.
இப்போது தேர்தல் காலத்து பண பரிவர்த்தனை முறைக்கு உங்கள் கட்சி ஒரு பல்கலைக் கழகமே துவங்கி பாடம் நடத்தி பட்டமே கொடுக்கலாம். தேங்காய் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், கனரக வாகனங்களை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர்கள், பெட்ரோல் வாகனங்கள் என்று இப்படி பல வழிகளில் எங்கள் கட்சி பணத்தை கொண்டு செல்கிறது என்ற் உங்கள் கட்சியை, சென்னை மொழியில் சொல்ல வேண்டுமானால் `போட்டு' கொடுத்து விட்டிர்களோ ?
ஜவுளி வண்டிகளை காவல்துறையினர் பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் உங்கள் தயாநிதி மாறன் தானே? மத்திய அதிகார மிரட்டலோடு ஜவுளிகள் மூலமாக
நீங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர்களுக்கு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் கொண்டு செல்லலாமே? வியாபாரிகளை மிரட்டும் வித்தை உங்களுக்கு தெரியாதா ? காங்கேயத்திலிருக்கிற மொத்த ஜவுளிக் கடையிலிருந்து கோவையிலிருக்கு சில்லறைக்கு கடைக்கு சரக்குகளை அனுப்பிவிட்டு, அவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தை உங்கள் கோவைக் கட்சிக்காரர்கள் வாங்கி கோவை வாக்காளர்களுக்கு கொடுக்க முடியாதா என்ன ?
சட்டம்- ஒழங்கு சீர் குலையும் என்கிறீர்களே? எத்தனை லட்சம் வியாபாரிகள் தினமும் சாலை வழியாக பணத்தையும், பொருடகளையும் கொண்டு செல்கிறார்கள். தமிழகத்தில் உங்கள் ஆட்சி நடக்கிறது. சட்டம்-ஒழங்கை பாதுகாக்க வேண்டியது உங்கள் அரசின் பொறுப்பு. ஆனால் தேர்தல் விதிமுறைகளால் உங்கள் விசுவாசத்திற்குரிய காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுவிட்டன். அவர்கள் மூலமாக சுலபமாக, இடைத்தேர்தல்கள் போல உங்களால காரியத்தை சாதித்துக் கொள்ள முடியவில்லை. இந்த கோபத்தை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அப்படியானால் சட்டம்- ஒழங்கை பாதுகாக்க உங்கள் அரசினால் முடியவில்லை என்றால் மத்திய அரசு உங்கள் ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தல் வரை தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரலாம் என்கீறீர்களா ?
உங்களுக்கு இந்த முறை மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தஞ்சை வடசேரியில் உங்கள் தொழிற்சாலைக்கு அந்தப் பகுதி மக்கள் முட்டுக்கட்டைப் போட்டார்கள். அதற்கு உங்கள் தமிழக அரசு உங்களுக்கு உரிய உதவியை செய்யவில்லை என்கிற வருத்தங்கள் உங்களுக்கு இருப்பது, உங்களைப் பொருத்தவரையில் நியாயமான விஷயம் தான். அதற்காக் தேர்தல் கமிஷனிடம் போய் உங்கள் ` எட்டப்ப' வேலையைக் காட்டியிருக்க வேண்டாம்.
உங்களுடை இந்த செயல் எனக்கு கட்டபொம்மன் வசனத்தைத்தான் நினைவு படுத்துகிறது"
`எட்டப்பா ! ஈனச் சொல் பேசாதே. வாழ விரும்பினாய். இனி நீ வாழ்ந்து கொள். வீணனை வணங்கினாய் வேண்டியதை வாங்கிக் கொள். கூலி கேட்டாய். கும்பிட்டாய். கோழையானாய், கூலியைப் பெற்றுக்கொள். ஆனால் தேர்தல் கமிஷன் உன்னைப் போற்றவேண்டும் அது உனக்கு இனிக்க வேண்டுமென்று மட்டும் எண்ணாதே. நீ காட்டிக் கொடுத்தாய் நான் காட்டிக் கொடுக்கப் பட்டேன்' இப்படி கட்டபொம்மன் வசனத்தை மாற்றி பேசும்படி செய்துவிட்டீர்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.
நல்ல பதிவு.
ReplyDeleteதேர்தல் கமிஷனின் நடைமுறைகள் தேர்தலுக்கு ஆறு மாத காலங்களுக்கு முன்பே நடைமுறைக்கு வரவேண்டும். மக்கள் 'பிளக்ஸ் போர்டுகள்' இல்லாமல் இவர்களது தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள். மே பதிமூன்று வரை மக்களுக்கு நிம்மதி தான். ஆனால் இவர்களது மன அழுத்தம் கூடும்.
//எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்// இந்த நான்கு சொற்களில் இரண்டாமது விடுத்து மற்றவை ஒன்றுக்கொன்று தொடர்புடயவைதான் என்று எல்லார்க்கும் தெரியும்.. அந்த இரண்டாவது சொல் இருக்கிறதே... வர வர (தேர்தல் நெருங்கி வர வர என்றும் சொல்லலாம்!) அதிகமாகிக்கொண்டே போகிறது.. பக்கத்தில் ஐஸ் வாட்டர் இல்லாமல், உங்கள வலைப்பூவைத் தொடவே முடிவதில்லை!!
ReplyDeleteஇவ்வாறே தொடர்ச்சியாக எழுதுங்க சார்... மே மூன்றாம் வாரத்துக்கப்புறமும்...
-ரோமிங் ராமன்