மேலே உள்ள வீடு யாருடையது என்று யூகிக்க முடிகிறதா ?
இந்த வீடு நமது ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவுடையது என்று இந்தப் படங்கள் கடந்த ஒரு மாதமாக இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வீடு எங்கிருக்கிறது என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. அதனால் இந்த வீடு ராசாவுடையதுதான் என்பதை உறுதி செய்ய முடியவில்லை
ராசாவிற்கு நீலகிரி மாவட்டத்தில் 40 ஏக்கரில் ஒரு பாதுகாப்பான பங்களா உண்டு என்று செய்திகள் ஏற்கெனவே வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் உறுதி செய்யப்படாத வதந்திகள் தான்.
இது போன்று பத்து படங்கள் வந்துள்ளது. படம் 1 ல் பின்னால் ஒரு மலை இருப்பது தெரிகிறது. படம் 2 லும் கூட மரங்கள் வெள்ளையாகவும், மரங்களுக்கு நடுவே ஒரு மலை முகடும் தெரிகிற்து.
இதை வைத்து தாவர வல்லுனர்கள், இந்த மரங்களில் இலைகள் பச்சையாக உள்ளது. மரங்கள் வெள்ளையாக இருக்கிறது. இந்த மரங்களை அறுத்தால் அது உள்ள மர நிறத்தில் தான் இருக்கும். ஆனால் மலையும், மலை சார்ந்த இடங்களிலும் உள்ள மரங்கள் அந்தப் பகுதியில் பெய்யும் பனியினால் வெள்ளையாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
அதனால் இடம் மலை சார்ந்தது என்பது உறுதியாகிறது. அது ஆ. ராசா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரியைச் சார்ந்ததுதானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. பெரம்பலூர் ஆ. ராசாவிற்கு இந்த மாளிகை மூலமாக `ஊட்டி வரை உறவு' அவருக்கு உண்டா? என்பதை இன்னும் யாரும் உறுதி செய்யவில்லை. இணையதளத்திலுள்ள நீலகிற நிபுணர்கள் யாராவது கண்டு பிடித்துச் சொல்வார்களா ?
ஒரு பத்திரிக்கையாளரான நீங்கள் இப்படி மற்றவருக்கு அவதூறு விளைவிக்கும் செய்திகளை கற்பனைக்கேனும் வெளியிடுவது தங்கள் தகுதிக்கு குறைச்சல்.
ReplyDeleteThe house is actually in California and was listed for sale in June 2010. Raja is not the owner. View the listing here: http://goo.gl/3geHu
Thanks: http://goo.gl/YalQW
உறுதி செய்யப்படாத forward mails எல்லாம் வலைப்பதிக்க ஆரம்பித்து விட்டீர்களே!
ReplyDeleteஅருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிற மாதிரி பெரிய வீடெல்லாம் ராஜாவுதா தெரியுது போல
ReplyDelete